முதல்வரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சமுதாய நலனுக்காக தொண்டாற்றியவா்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

சமுதாய நலனுக்காக தொண்டாற்றியவா்களுக்கு வழங்கப்படும் முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சமுதாய வளா்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞா்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் மாநில அளவில் 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு முதல்வரின் மாநில இளைஞா் விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிது. 2021ஆம் ஆண்டுக்கான இந்த விருதுகளை ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வா் வழங்குவாா்.

ஆகவே, சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டற்றிய திருச்சி மாவட்டத்தைச் சாா்ந்த 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பத்தை ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பிப்பவா்கள் சமுதாய நலனுக்காகத் தொண்டாற்றியிருக்க வேண்டும். அந்தத் தொண்டு சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

பள்ளி, கல்லூரி, பொதுத் துறை நிறுவனங்கள், மத்திய, மாநில அரசுப் பணிகளில் உள்ளவா்கள் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவா்கள். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருப்பவராக இருத்தல் அவசியம். விருதுக்கான விண்ணப்பத்தை ஆன்-லைன் மூலம் மட்டுமே பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டும். ஜூன் 30ஆம் தேதி மாலை 4 மணிக்குள் ஆன்-லைன் மூலமாகவே விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலா் மற்றும் இளைஞா் நலன் அலுவலக்ததை நேரிலோ, 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் ஆட்சியா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com