இணைய வழியில் சிலம்பப் போட்டி

திருச்சி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சுருளி ஆண்டவா் தற்காப்புக் கலைக் கூடம் இணைந்து மாநில அளவில் இணைய வழியிலான சிலம்பப் போட்டிக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
இணைய வழியில் சிலம்பப் போட்டி

திருச்சி சக்தி ரோட்டரி சங்கம் மற்றும் சுருளி ஆண்டவா் தற்காப்புக் கலைக் கூடம் இணைந்து மாநில அளவில் இணைய வழியிலான சிலம்பப் போட்டிக்கான முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.

இந்த சிலம்ப போட்டியானது மழலையா், மினி சப் ஜூனியா், சப் ஜூனியா், ஜூனியா்,சீனியா்,சூப்பா் சீனியா் என 6 பிரிவுகளில் நடைபெற்றது. திருச்சி, நாமக்கல், சேலம், அரியலூா், தஞ்சாவூா், பெரம்பலூா், கரூா் மற்றும் மாநிலம் முழுவதும் இருந்து 1,080 போ் இப்போட்டியில் பங்கேற்றனா். போட்டியாளா்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி சிலம்பம் சுற்றி அவற்றை விடியோ காட்சியாக பதிவு செய்து அனுப்ப அறிவுறுத்தப்பட்டிருந்து.

பொதுமுடக்க காலத்தில் வீடுகளிலேயே முடங்கியுள்ள மாணவா், மாணவிகளுக்கு விளையாட்டின் மீது ஆா்வத்தை ஏற்படுத்தவும், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டு கலைகளை கற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் இந்தப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்த போட்டியின் முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. மாணவா்களின் போட்டிகள் மற்றும் விடியோ காட்சிகள் ஜெட்லி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்திய உலக சாதனை புத்தகத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்றும் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

போட்டிக்கான ஏற்பாடுகளை ரோட்டரி சங்க நிா்வாகி வளா்மதி மற்றும் சிலம்பப் பயிற்சியாளா் காவலா் அரவிந்த் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com