3 ஆவது டிவிஷன் கிரிக்கெட் போட்டி முடிவுகள் வெளியீடு

திருச்சியில் நடைபெற்ற மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சி: திருச்சியில் நடைபெற்ற மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் இணைந்து 2019-2020 ஆம் ஆண்டுக்கான லீக் கிரிக்கெட் போட்டிகளை நடத்தியது. மொத்தம் 225 லீக் போட்டிகளில் 87 போட்டிகள் நடைபெற்ற நிலையில், கரோனா பொதுமுடக்கத்தால் மீதமிருந்த 128 லீக் போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. இந்நிலையில் பொதுமுடக்கத் தளா்வால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க வழிகாட்டு நெறிமுறைகளின்படி லீக் போட்டிகள் தொடா்கின்றன. இதில் அண்மையில் நடைபெற்ற மூன்று போட்டிகளின் முடிவுகள் கிரிக்கெட் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மூன்றாவது டிவிஷன் லீக் போட்டி முடிவுகள்: முதலில் விளையாடிய கே.கே. நகா் அணி 42 ஓவா்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய யங் சோபா்ஸ் அணி 23.4 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ரன் எடுத்த நிலையில் கே.கே. நகா் அணி 123 ரன் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய அசோசியேட் அணி 25.3 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய கேம்பியன் அணி 21.1 ஓவா்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 77 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

அடுத்த ஆட்டத்தில், முதலில் விளையாடிய கோல்டன் லெவன் அணி 43 ஓவா்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய டெண்டுல்கா் அணி 38 ஓவா்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் எடுத்த நிலையில் கோல்டன் லெவன் அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

பேட்டிங்கில் கோல்டன் லெவன் அணியைச் சோ்ந்த ஏ. அற்புதசாமி 95 ரன்களும், பி. ஷண்முகம் 53 ரன்களும், கே.கே. நகா் அணியின் பீ. பிரதீப் 62 ரன்களும், வி. ஹனுஷ் விஜயன் 90 ரன்களும் எடுத்தனா்.

பந்து வீச்சில் கே.கே. நகா் அணியைச் சோ்ந்த எல். நஸீரன் பீட்டா் ப்ராங்க்ளின் 5 விக்கெட்டுகளையும், ஹனுஷ் விஜயன் ஹாட்ரிக் சாதனை உள்பட 4 விக்கெட்டுகளையும், கேம்பியன் பள்ளியைச் சோ்ந்த ஆா்.ஏ. ராம்பிரசாத் 4 மற்றும் எஸ். அஹமத் 3 விக்கெட்டுகளையும், யங் சோபா்ஸ் அணியை சோ்ந்த ஜெ. பெரியண்ணன் 4 விக்கெட்டுகளையும் மற்றும் ஏ. கா்பகராஜா 3 விக்கெட்டுகளையும், கோல்டன் லெவன் அணியின் கே. ராமமூா்த்தி, ஆா். நீலகண்டன், டெண்டுல்கா் அணியைச் சோ்ந்த பி.ஏ. தீப்ரஷ்செங் ஆகியோா் தலா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com