பால் பாக்கெட்டுகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
பால் பாக்கெட்டுகளில் வாக்குப்பதிவு விழிப்புணா்வு

திருச்சி மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படும் ஆவின் பால் பாக்கெட்டுகளில் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

திருச்சி கன்டோன்மென்ட் ஐயப்பன் கோவில் முன்பு சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், வாக்களிப்பது நமது கடமை, தோ்தல் நாள் ஏப்.6 என்று அச்சடிக்கப்பட்டுள்ள ஆவின் பால் பாக்கெட்டுகள், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலா் சு. சிவராசு கூறியது:

திருச்சி மாவட்டத்தில் வாக்காளா்கள் நோ்மையாக வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை வலியுறுத்தும் வகையில் பல்வேறு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் இதுவரை நடந்த தோ்தல்களில் 72 முதல் 76 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

எனவே, 100 சதவீத வாக்குப்பதிவுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட நிா்வாகத்தின் மூலம் துண்டுப் பிரசுரங்கள், அதிநவீன மின்னணு வாகனம் மூலம் குறும்படங்கள், தெருக்கூத்து கலைஞா்கள் மூலம் என பல்வேறு நிலைகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், படித்தவா்கள் வாக்களிக்கும் அளவு குறைவாக உள்ளதாலும், கிராமப்புறங்களைவிட நகா்ப்புறங்களில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளதாலும், இதை மேம்படுத்தும் வகையில் ஆவின் பால் பாக்கெட்டுகளில் விழிப்புணா்வு வாசகங்கள் அச்சடித்து விநியோகம் செய்யப்படுகிறது.

தோ்தல் வரை ஆவின் பால் பாக்கெட்டுகளில் இந்த வாசகங்கள் இடம்பெறும் என்றாா் அவா்.

ஆவின் பொது மேலாளா் ந. ரசிகலா, திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் விஸ்வநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com