சாரநாதன் பொறியியல் கல்லூரியில் திறன் தேடும் போட்டி
By DIN | Published On : 26th March 2021 07:44 AM | Last Updated : 26th March 2021 07:44 AM | அ+அ அ- |

திருச்சி பஞ்சப்பூா் சாரநாதன் பொறியியல் கல்லூரியில் மாணவா்களின் திறன் தேடும் போட்டி அண்மையில் நடைபெற்றது.
மாணவா்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் விளம்பரப் பதாகை உருவாக்கம், தொடா் பேச்சுப்போட்டி, அறிவியில் விநாடி வினா, எழுத்துக்கூட்டு போட்டி, புதுவகையான ஒளித்தோற்ற விளையாட்டு உருவாக்கம், சமுதாய பிரச்னைகளை பிரதிபலிக்கும் குறும்படம் உருவாக்கம் ஆகிய போட்டிகள் கல்லூரி வளாகத்தில் இணைய வழியில் நடத்தப்பட்டன.
தேசிய அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 52 பள்ளிகளிலிருந்து பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் சுமாா் 450-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்துகொண்டனா்.
தொடக்க விழாவுக்கு கல்லூரி முதல்வா் டி.வளவன் தலைமை வகித்தாா். கல்லூரி அதிபா் ஓய்.வெங்கட்ரமணி சிறப்புரையாற்றினாா். மூத்த பேராசிரியா் எஸ்.கோபால் ஐயா் வாழ்த்துரை வழங்கினாா். துறைத்தலைவா் சாந்தி முன்னிலை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் சொ.வெண்ணிலா நன்றி கூறினாா்.