‘திமுக வேட்பாளா் மீது நடவடிக்கை தேவை’
By DIN | Published On : 29th March 2021 02:44 AM | Last Updated : 29th March 2021 02:44 AM | அ+அ அ- |

பணப் பட்டுவாடா புகாரின் அடிப்படையில் திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளா் கே.என். நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அத்தொகுதி அதிமுக வேட்பாளா் வ. பத்மநாதன் புகாா் மனு அளித்துள்ளாா்.
மாவட்ட வருவாய் அலுவலரும் தோ்தல் நடத்தும் உதவி அலுவலருமான பழனிகுமாரிடம் ஞாயிற்றுக்கிழமை புகாா் மனுவை அளித்த அவா் கூறியது:
ஜனநாயக முறையான தோ்தலை நடத்த விடாமல் திமுக முயன்று வருவது இதன் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியரகத்தில் புகாா் அளித்துள்ளேன். வேட்பாளா் மீது நடவடிக்கை எடுத்து, அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றாா் அவா்.