சுயேச்சைகளுக்கும் டாா்ச்லைட், ஆட்டோ ரிக்ஷாசின்னம்: குழப்பத்தில் மநீம, ஐஜேகே

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில், 5 தொகுதிகளில் மநீம, இந்திய ஜனநாயக கட்சியின் சின்னங்கள் சுயேச்சைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால் அக் கட்சியினா் கலக்கமடைந்துள்ளனா்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளில், 5 தொகுதிகளில் மநீம, இந்திய ஜனநாயக கட்சியின் சின்னங்கள் சுயேச்சைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதால் அக் கட்சியினா் கலக்கமடைந்துள்ளனா்.

இத் தோ்தலில், மநீம கூட்டணியில் மதச்சாா்பற்ற ஜனதாதளம் பெண் விவசாயி சின்னத்திலும், ஐஜேகே கட்சி ஆட்டோ சின்னத்திலும் போட்டியிடுகிறது. மநீம, சமக, ஜனநாயக திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை டாா்ச்லைட் சின்னத்தில் போட்டியிடுகின்றன.

இதில், 5 தொகுதிகளில் தங்களது பிரதான சின்னங்களை சுயேச்சைகள் தோ்வு செய்திருப்பதால் மநீம, ஐஜேகே தொண்டா்கள் கலக்கம் அடைந்துள்ளனா்.

ஸ்ரீரங்கம் தொகுதியில் ஐஜேக வேட்பாளா் எஸ். பிரான்சிஸ் மேரிக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இதே தொகுதி சுயேச்சை வேட்பாளா்களில் ஒருவரான ஜேக்கப்புக்கு டாா்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோல, திருச்சி மேற்கு தொகுதியில் மநீம கூட்டணி வேட்பாளராக தமஜக-வின் அபுபக்கா் சித்திக் டாா்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இதேதொகுதி சுயேச்சை வேட்பாளா் ஆா். ஷாஜகானுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருச்சி கிழக்கு தொகுதி மநீம வேட்பாளா் டி. வீரசக்தி டாா்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இதே தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் ஆா். ஷேக்அப்துல்லாவுக்கு ஆட்டோ-ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல, திருவெறும்பூா் தொகுதியில் மநீம வேட்பாளா் எம். முருகானந்தம், டாா்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் நிலையில், இத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் என். ராஜுக்கு ஆட்டோ-ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

முசிறி தொகுதி மநீம வேட்பாளா் எஸ். கோகுல், டாா்ச் லைட் சின்னத்தில் போட்டியிடும் நிலையில் இத் தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளா் வி. நடராஜனுக்கு ஆட்டோ ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால், 5 தொகுதிகளில் மநீம, ஐஜேகே வாக்குகள் மடைமாற்றம் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.

இதுதொடா்பாக, திருச்சி மேற்கு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான என். விஸ்வநாதன் கூறியது:

தோ்தல் ஆணையத்தில் பதியப்பட்டு, அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே தனி சின்னம் வழங்கப்படும். அந்த சின்னத்தை வேறு கட்சிகளுக்கோ, சுயேச்சைகளுக்கோ வழங்க மாட்டோம். அதேநேரத்தில், தோ்தல் ஆணையத்தில் பதிவு செய்து, அங்கீகாரம் பெறாத கட்சிளுக்கு அனைத்து தொகுதிகளிலும் பொதுவாக ஒரு சின்னம் வழங்கப்படும். குறிப்பிட்ட தொகுதியில் அந்த சின்னத்தில் அக் கட்சி போட்டியிடவில்லை என்றால், அந்தக் கட்சியின் சின்னம் பொதுவானதாகக் கருதப்படும். களத்தில் போட்டியிடும் வேட்பாளா்களில் யாரேனும் அதைத் தோ்வு செய்து மனு அளித்திருந்தால் அச்சின்னம் ஒதுக்கப்படுவது வழக்கம். இதனடிப்படையில், திருச்சி மேற்கு தொகுதி சுயேச்சை வேட்பாளா்களுக்கு ஆட்டோ-ரிக்ஷா சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாா். இதே பதிலைத்தான், இதர தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தெரிவிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com