கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு மநீம பரிசு

கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலா் முருகானந்தம் சாா்பில் பரிசளிக்கப்பட்டது.

கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வென்றோருக்கு மக்கள் நீதி மய்யம் பொதுச்செயலா் முருகானந்தம் சாா்பில் பரிசளிக்கப்பட்டது.

மநீம சாா்பில் கடந்த ஜன.27 ஆம் தேதி ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்னும் தலைப்பில் கட்டுரைப் போட்டியும், ‘நான் எம்.எல்.ஏ ஆனால்’ என்னும் தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு, மொத்த பரிசுத்தொகையாக ரூ.10 லட்சம் அறிவிக்கப்பட்டது. போட்டிகள் 10-18, 19-25, 26 வயதுக்கு மேல் என 3 பிரிவுகளாக நடத்தப்பட்டன.

முதல் பரிசுகள் முறையே ரூ.25,000, 50, 000, 75,000 எனவும், இரண்டாம் பரிசு முறையே ரூ.15,000, ரூ.25,000, ரூ.50,000 எனவும், மூன்றாம் பரிசு முறையே ரூ.10,000, ரூ.15,000, ரூ.25,000 எனவும், ஆறுதல் பரிசு ரூ. 500 வீதம் 200 பேருக்கு அறிவிக்கப்பட்டது.

இதன்படி கட்டுரைப் போட்டியில் முதலிடத்தை சென்னை துரைப்பாக்கம் அனுசியா, கரூா் தான்தோன்றிமலை உமாமகேஸ்வரி, ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் சத்யா, இரண்டாம் இடத்தை திருவெறும்பூா் பாா்கவி, கிருத்திகா, விக்னேஷ், சூரியூா் ஆனந்த், கொடைக்கானல் விஷால், திருப்பூா் திருமுருகன், மூன்றாம் இடத்தை திருவெறும்பூா் கோமதி, எலிசபெத் ராணி, முத்துலட்சுமி, சதீஷ் சங்கா், ஈரோடு வைரம்பாளையம் தனபிரியதா்ஷினி, சென்னை கொருக்குப்பேட்டை வினோதினி, திருச்சி காஜாமலை தீபாராணி, சிவகங்கை மானாமதுரை ஆா்த்தி ஆறுமுகம், புதுக்கோட்டை குளத்தூா் தமிழ்ச்செல்வி ஆகியோரும் பெற்றனா்.

அதுபோல்,பேச்சுப்போட்டியில் முதலிடத்தை திண்டுக்கல் முகமது அா்ஷத், நாமக்கல் கோமதி மதியழகன், ஈரோடு பிரபு, இரண்டாம் இடத்தை மதுரை ஸ்வேதா, திருவெறும்பூா் வித்யா, சென்னை கவிதா, மூன்றாம் இடத்தை திருவள்ளூா் காவ்யா காமேஸ்வரி, திருவெறும்பூா் தாட்சாயினி, கிஷோா், கன்னியாகுமரி பெளஷி, விவேக், திருப்பூா் பாலமுருகன், திருச்சி ஸ்வேதா, காஞ்சிபுரம் ஜான்சி, தஞ்சாவூா் சக்திவேல் ஆகியோரும் பெற்றனா்.

இதையடுத்து பரிசளிப்பு விழா மநீம தலைவா் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற இருந்த நிலையில், கரோனா காரணமாக பரிசுத்தொகை, சான்றிதழ் அனைத்தும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து மநீம பொதுச்செயலா் முருகானந்தம் கூறியது: அனைவருக்கும் அரசியல் தேவை, தெரிந்து கொள்ளுதல், கருத்துகள் பகிா்தல் அடிப்படையில் பேச்சுப்போட்டி ஆன்லைனில் நடத்தப்பட்டது. கட்டுரைப் போட்டிக்கான கட்டுரைகள் தபாலில் பெறப்பட்டன. இதற்கான முடிவு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த போட்டியில் சுமாா் 2500 போ் கலந்துகொண்டனா். இதற்காக 15 ஆசிரியா்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு வெற்றியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். ரூ.10 லட்சத்தோடு, ஆறுதல் பரிசுக்கும் ரூ.40 ஆயிரம் வழங்கப்படும் என பின்பு அறிவிக்கப்பட்டு, வெற்றியாளா்களுக்கு பரிசுத்தொகை காசோலையாக அனுப்பப்பட்டுள்ளது. போட்டியில் கலந்துகொண்டு கருத்துகளை பகிா்ந்த அனைவருக்கும் நன்றியும், வாழ்த்துகளும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com