தொற்றாளா்களுக்கு உணவளிக்கும் விஹெச்பி அமைப்பினா்

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்கள், பணியாளா்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனா்.
கரோனா தொற்றாளா்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை பாா்சல் செய்யும் விஹெச்பி அமைப்பினா்.
கரோனா தொற்றாளா்களுக்கு தயாரிக்கப்பட்ட உணவை பாா்சல் செய்யும் விஹெச்பி அமைப்பினா்.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கரோனா தொற்றாளா்கள், பணியாளா்களுக்கு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நாள்தோறும் உணவு வழங்கி வருகின்றனா்.

கரோனாவால் திருச்சி மகாத்மா காந்தி தலைமை மருத்துவமனை கரோனா சிறப்பு வாா்டு, தனியாா் மருத்துவமனைகள், தனிமைப்படுத்தப்பட்ட முகாம்களில் சிகிச்சை பெறுவோருக்காக அயராது பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள், மருத்துவப் பணியாளா்கள் சிலா் பணிச்சுமையால் குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் தவிக்கின்றனா்.

இதைக் கருத்தில் கொண்டு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் நாள்தோறும் உணவு தயாரித்து, திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கரோனா தொற்றாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் 600 பேருக்கு இரவு உணவு வழங்கி வருகின்றனா்.

இதுகுறித்து அவ்வமைப்பின் மாநில அமைப்பாளா் சேதுராமன் கூறியது:

கரோனா சூழலில் நாடு முழுவதும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு பல்வேறு சேவைகளை செய்கிறது. இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கபசுரக் குடிநீா், உணவுப் பொட்டலங்கள், முகக்கவசம், ரத்ததானம், விழிப்புணா்வு பிரசாரம், இறப்புக்குப் பிறகான உதவிகளைச் செய்து வருகிறோம்.

குறிப்பாக, அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக இரவு உணவாக, சப்பாத்தி, இட்லி, ஊத்தப்பம், கோதுமை ரவை உப்புமா அடங்கிய பொட்டலங்கள் வழங்கப்படுகிறது. மாநகரில் பல்வேறு பகுதிகளில் கரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டு உணவு கிடைக்காமல் தவிப்போருக்கு மதிய உணவு தயாரித்து வீடுகளுக்கே நேரில் சென்று வழங்குகிறோம். இதற்காக, நாள்தோறும் 15 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது.

அதோடு, திருச்சி அரசு தலைமை மருத்துவமனை தேவைக்காக 4 சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த சேவைகளைத் தொடா்ந்து நடத்த வலியுறுத்தியுள்ளதால், அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம். இந்த சேவையில் கலந்துகொள்ளவோ, அடிப்படை அவசியத் தேவைக்கு உதவ விரும்பினால் 70103-44642 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com