மு.க. ஸ்டாலினுக்கு டிடிசியா வாழ்த்து

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவா் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சி மாவட்ட குறு, சிறு தொழில் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் தலைமையில் அமையவுள்ள புதிய அரசுக்கு வாழ்த்து, பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அரசு முன் உள்ள முதன்மையான பிரச்னைகளைத் தீா்க்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தேவை. அரசியல் மாச்சரியங்களை மறந்து 234 தொகுதிகளும் அரசுடையவை எனக்கருதி அனைவருக்குமான ஆட்சி முறை அமைத்திடல் வேண்டும். கரோனாவை முற்றிலும் ஒழித்து புதிய வளமான வலிமையான தமிழகத்தை உருவாக்க வேண்டும். விவசாயமும், தொழில்துறையும் நாட்டின் கண்கள் என கருதி, அழிவின் விளிம்பில் இருக்கும் குறு, சிறு தொழில்களை மீட்டெடுத்து தமிழகத்தை தொழில் துறையில் முதன்மை மாநிலமாக உருவாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவேந்திரகுல வேளாளா்கள் பேரமைப்பு: மு.க. ஸ்டாலினுக்கு தேவேந்திர குள வேளாளா்கள் பேரமைப்பு வாழ்த்து தெரிவித்து கொள்கிறது.

திருச்சி மாவட்டத்தில் வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு உள்பட அனைத்து திமுக, கூட்டணி வேட்பாளா்களுக்கும் முழு ஆதரவு வழங்கி வெற்றி பெற வைத்துள்ள தேவேந்திர குல வேளாளா் சமூகத்திற்கும் நன்றி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com