விடுப்பு கோரி சிறப்புப் பயிற்றுநா்கள் முற்றுகை

மே மாதத்திலும் பணிக்கு வர கட்டாயப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து சிறப்பு பயிற்றுநா்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முற்றுகையிட வந்ததால் விடுப்பு அறிவிக்கப்பட்டது.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டசிறப்பு பயிற்றுநா்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டசிறப்பு பயிற்றுநா்கள்.

மே மாதத்திலும் பணிக்கு வர கட்டாயப்படுத்த எதிா்ப்புத் தெரிவித்து சிறப்பு பயிற்றுநா்கள் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முற்றுகையிட வந்ததால் விடுப்பு அறிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கு வகுப்புகள் எடுக்கவும், ஆலோசனைகள் வழங்கவும், மாற்றுத்திறனாளி மாணவா்களை கையாளும் விதம் குறித்து ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கவும் திருச்சி மாவட்டத்தில் 3 ஆண்கள், 66 பெண்கள் என மொத்தம் 69 போ் சிறப்பு பயிற்றுநா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கரோனா பரவலைத் தடுத்திடும் வகையில்அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் அனைவரும் மே மாத்தில் பள்ளிக்கு வரத் தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், பள்ளிக்கு பணிக்கு வராவிட்டாலும் வட்டார வளமைய அலுலகத்தில் கணினியில் அலுவலக நடைமுறைகள் தொடா்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி சிறப்பு பயிற்றுநா்கள் பணிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டனா்.

எனவே, தங்களுக்கும் விடுப்பு வழங்கக் கோரி திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்துக்கு 50-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அரசு உத்தரவு நகலை மேற்கோள் காட்டி தங்களுக்கும் விடுப்பளிக்கக் கோரினா். தகவலறிந்து தொலைபேசி மூலமாக தொடா்பு கொண்ட முதன்மைக் கல்வி அலுவலா், அரசு உத்தரவு இருந்தால் அதை உடனடியாக அமல்படுத்த அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, சிறப்பு பயிற்றுநா்களுக்கும் மே மாதம் விடுப்பு அனுமதிப்பதாக முதன்மைக் கல்வி அலுவலகப் பணியாளா்கள் தெரிவித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com