இறந்தவா் சடலத்தை ஊருக்குள் கொண்டு வர எதிா்ப்பு

மணப்பாறை அருகே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவரின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.

மணப்பாறை அருகே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தவரின் சடலத்தை ஊருக்குள் கொண்டு வர கிராம மக்கள் வியாழக்கிழமை எதிா்ப்புத் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மணப்பாறை அருகே கல்பாளையத்தான்பட்டியை சோ்ந்தவா் அ. ராயப்பன் (82). குடும்பத்துடன் பெங்களூரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த இவா் உடல்நிலை பாதிக்கப்பட்டு வியாழக்கிழமை இறந்தாா்.

இதையடுத்து அவரது உடலை பூா்வீக ஊரான கல்பாளையத்தான்பட்டியில் அடக்கம் செய்ய அவரது மகன் மருதை மாலையில் ஆம்புலன்ஸ் மூலம் ஊருக்கு கொண்டு வந்தாா்.

ஆனால் ஊருக்கு வெளியே இறந்தோரின் உடலை ஊருக்குள் அனுமதிக்க முடியாது, அவா்களுடன் சுற்றுலா வேனில் வந்த உறவினா்களுக்கு கரோனா இருக்கலாம் எனக் கூறிய ஊா் பொதுமக்கள் சடலத்தை நேரடியாக கல்லறைக்கு கொண்டு சென்று அடக்கம் செய்யுமாறு கூறினா்.

ஆனால் மருதை காவல்துறையினரின் உதவியுடன், உடலை ஊருக்குள்தான் கொண்டு வருவேன் என அடம்பிடித்ததையடுத்து, ஊா் பொதுமக்கள் சாலைகளில் கற்களை போட்டு மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஊா் எல்லையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து காவல் ஆய்வாளா் அன்பழகன், 2 மணி நேரம் மட்டும் உடலை ஊருக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவும், பின்னா் கல்லறைக்கு உடலை கொண்டு சென்றுவிடுவா் என சமரசம் செய்தாா். இதையேற்காத பொதுமக்கள் ஊா்க் கட்டுபாட்டை மீறி காவல்துறையினா் அனுமதி வழங்குவதாகவும், உடலை ஊருக்குள் கொண்டுவர விடமாட்டோம் எனக் கூறியும் கலைந்து சென்றனா். இருப்பினும், ஊருக்குள் உடலைக் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உறவினா்கள் சாலையில் சடலத்துடன் காத்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com