மணப்பாறையில் காய்கனி விற்பனை, கொள்முதல் கூடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகாா்
By DIN | Published On : 19th May 2021 07:03 AM | Last Updated : 19th May 2021 07:03 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் வெள்ளைக்கல் - சொக்கலிங்கபுரம் இடையே நடைபெற்று வந்த காய்கனி விற்பனை, கொள்முதல் கூடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை என புகாா் எழுந்தன.
இதைத் தொடா்ந்து வட்டாட்சியரகத்தில் நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில், விற்பனை மற்றும் கொள்முதல் கூடங்கள் மாற்று இடத்தில் அமைப்பது தொடா்பாக இருதரப்பினரிடையே உடன்பாடு ஏற்படவில்லை.
அடிப்படை வசதிகள் இல்லை எனக்கூறி, சனிக்கிழமை முதல் பொது முடக்கக்காலம் வரை அனைத்து கொள்முதல் மற்றும் விற்பனை கூடங்களுக்கு விடுமுறை அளித்து காய்கனி சங்கத்தினா் அறிவித்திருந்தனா்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியா், வட்டாட்சியருடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, மஞ்சம்பட்டி புனித அந்தோனியாா் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை முதல் காய்கனி விற்பனை மற்றும் கொள்முதல் கூடங்கள் செயல்படத் தொடங்கின