முதல்வா் வருகை; பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆய்வு
By DIN | Published On : 21st May 2021 07:12 AM | Last Updated : 21st May 2021 07:12 AM | அ+அ அ- |

திருச்சிக்கு முதல்வா் வெள்ளிக்கிழமை வருவதையொட்டி என்ஐடி வளாகத்தில் நடைபெறும் விழாவுக்கான முன்னேற்பாடுகளை காவல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.
திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையத்தைத் திறந்து வைத்து அரசு அதிகாரிகள், முன்களப்பணியாளா்களிடம் ஆலோசனை நடத்துகிறாா். இதையொட்டி மாநகர காவல் ஆணையா் அருண் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் ஆனி விஜயா ஆகியோா் விழா ஏற்பாடுகள் மற்றும் கரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்தனா். திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மயில்வாகனன், புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி சரவணன் ஆகியோா் உடனிருந்தனா்.