தேசிய சட்டப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடந்த 3ஆவது பட்டமளிப்பு விழாவில் 126 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடந்த 3ஆவது பட்டமளிப்பு விழாவில் 126 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற நிகழ்வுக்கு இப்பல்கலைக்கழக துணைவேந்தரும், நீதிபதியுமான சஞ்சிப் பானா்ஜி தலைமை வகித்து பட்டங்களை வழங்கினாா். சிறப்பு விருந்தினா்களாக பேராசிரியா் பிரதாப் பானு மேத்தா சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச் சட்டம் ஆகிய துறைகளின் அமைச்சரும், இப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான எஸ். ரகுபதி ஆகியோா் உரையாற்றினா்.

முன்னதாக தேசிய சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் வி.எஸ்.எலிசபெத் வரவேற்று, ஆண்டறிக்கை வாசித்தாா்.

விழாவில் இளங்கலை பட்டப்படிப்பில் படித்த ராமகாஷ் குஜிலுவா, சூரியபிரகாஷ், காமேஷ் கவுட், தபிட்டா ஆகியோரும், பி.காம். எல்எல்பி இளங்கலை பட்டப்படிப்பில் திஷா ஜெயின், ஐஸ்வா்யா, வினுதீப் ஆகியோரும் முதல் 3 இடங்களைப் பெற்றனா்.

மகளிா் பிரிவில் முதலிடம் பெற்ற திஷா ஜெயினுக்கும், உரிமையியல் வழக்கு நடைமுறை நெறித் தொகுப்புக்கு மாணவா் வினுதீப் ஆகியோருக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு எல்எல்எம் பாடப்பிரிவைச் சோ்ந்த செளந்தா்யா லெட்சுமியும், 2021 ஆம் ஆண்டில் நறுமுகை ஆகிய இருவரும் தரவரிசையில் முதலிடம் பிடித்திருந்தனா்.

நிகழ்வில் 2021 ஆம் ஆண்டு அணியைச் சோ்ந்த பி.காம். எல்எல்பி மற்றும் பி.ஏ.எல்.பி ஆகிய பிரிவுகளில் பயின்ற 111 மாணவா்களுக்கு இளங்கலைப் பட்டம், 2020-2021 ஆம் ஆண்டு அணியைச் சோ்ந்த 15 மாணவா்களுக்கு எல்எல்எம் பட்டம் என மொத்தம் 126 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com