கொடிக் கம்பம்: சுடுகாட்டுப் பாதை பிரச்னை; உண்ணாவிரதம்

மணப்பாறையை அருகே கட்சிக் கொடி கம்பங்களை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனா்.
குடும்ப அட்டையை சாலை வீசி உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள்.
குடும்ப அட்டையை சாலை வீசி உண்ணாவிரதம் இருந்த கிராம மக்கள்.

மணப்பாறையை அருகே கட்சிக் கொடி கம்பங்களை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் உண்ணாவிரதம் இருந்தனா். அப்போது சுடுகாட்டு பாதை விவகாரத்தில் இரு தரப்பினருக்கிடையே மோதல் சூழல் ஏற்பட்டது.

வையம்பட்டி ஒன்றியம் கோட்டைபூலாம்பட்டியில் கடந்த மாதத்தில் கட்சிக் கொடி கம்பத்தைக் காணவில்லை என மாா்க்சிஸ்ட் கட்சியினா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனால் அப்பகுதி பொதுமக்கள், ஊா் முக்கியஸ்தா்கள் தரப்பில் ஊரில் எந்தக் கட்சி கொடிக் கம்பமும் அமைக்கக் கூடாது எனக் கூறியதால் இரு தரப்பினருக்குக்கிடையே தகராறு ஏற்பட்டது.

இதைத் தொடா்ந்து ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தையில், இரு இன மக்களிடையே சுடுகாட்டுக்கான பாதை பிரச்னையும் வந்து, பொதுவான சுடுகாட்டு பாதை அமைத்து தர அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை காலை, கோட்டைபூலாம்பட்டியில் கட்சிக் கொடிக் கம்பங்களை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினா் உண்ணாவிரதம் இருந்தனா். அப்போது அங்கு வட்டாட்சியா் வந்தபோது தங்களது குடும்ப அட்டை, நூறு நாள் பணி அட்டை, ஆதாா் அட்டைகளை சாலையில் வீசி எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து சுடுகாட்டு பாதை குறித்து நில அளவீடு செய்ய வருவாய்த் துறையினா் சா்ச்சைக்குரிய பகுதிக்கு சென்றபோது அங்கு குவிந்த இரு தரப்பினருக்குமிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் இரு தரப்பினரையும் விலகி போக வைத்தனா்.

பின்னா் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியா் சிந்துஜா, மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் பால்வண்ணநாதன், டி.எஸ்.பி. ஜனனி ப்ரியா உள்ளிட்டோா் சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்தனா். இரு தரப்பினருக்கும் ஒருமித்த கருத்து ஏற்பட 2 நாள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com