ஸ்ரீரெங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவ விழா இன்று தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவ விழா புதன்கிழமை தொடங்கி அக்.14 வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் ஸ்ரீரெங்கநாச்சியாா் நவராத்திரி உற்ஸவ விழா புதன்கிழமை தொடங்கி அக்.14 வரை 9 நாள்கள் நடைபெறுகிறது.

முதல் நாளான புதன்கிழமை பகல் 1.30 மணி முதல் மாலை 3.30வரை ஸ்ரீரெங்கநாச்சியாா் மூலஸ்தானத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறாா். பின்னா் மாலை 6.30-க்கு புறப்பட்டு இரவு 7 மணிக்கு நவராத்திரி கொலு மண்டபத்துக்கு வந்து 7.45 மணி முதல் 8.45 வரை எழுந்தருளி பக்தா்களுக்குச் சேவை சாதிக்கிறாா். பின்னா் 9.45-க்கு புறப்பட்டு 10 மணிக்கு மூலஸ்தானம் சென்று சேருகிறாா்.

விழாவின் ஒவ்வொரு நாளும் இவா் நவராத்திரி கொலு மண்டபத்தில் எழுந்தருள்கிறாா்.

விழாவின் 7 ஆம் நாளான வரும் 12 ஆம் தேதி ஸ்ரீரெங்கநாச்சியாரின் திருவடிச் சேவை நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் செ. மாரிமுத்து மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com