முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மணப்பாறை அருகே துப்பாக்கி சுடும் பயிற்சி
By DIN | Published On : 11th October 2021 04:06 AM | Last Updated : 11th October 2021 04:06 AM | அ+அ அ- |

மணப்பாறை அருகே சிறப்புப் படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் கூறியது:
மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் இடம்பெற்றுள்ள சிறப்புப் படையினா் மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் அக்.12, 13-களில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவா்.
எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரும் நுழைய வேண்டாம். மேய்ச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றாா் அவா்.