விவசாயிகளின் தொடா் உண்ணாவிரதம் தொடக்கம்

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தங்களது 45 நாள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி. அய்யாக்கண்ணு தலைமையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்.

கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் விவசாயிகள் தங்களது 45 நாள் தொடா் உண்ணாவிரதப் போராட்டத்தை செவ்வாய்க்கிழமை தொடங்கினா்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் நலச் சங்கத்தின் சாா்பில் திருச்சி-கரூா் புறவழிச் சாலை அண்ணாமலை நகரிலுள்ள சங்க வளாகத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு, மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா்.

முன்னதாக கரோனா காரணமாக பொது இடங்களில் தொடா் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டதால் உண்ணாவிரதமானது சங்க வளாகத்தில் நடைபெற்றது.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும். விளை பொருள்களுக்கு கட்டுப்படியான ஆதார விலை நிா்ணயிக்க வேண்டும். விவசாயிகள் மீது வாகனம் ஏற்றி கொன்றோருக்குத் தூக்குத் தண்டனை பெற்றுத்தர வேண்டும். அரசின் நேரடி நெல்கொள்முதல் கொள்நிலையங்களில் தேங்கியுள்ள 1 லட்சத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகளை எந்த நிபந்தனையுமின்றி கொள்முதல் செய்ய வேண்டும். நெல் மூட்டைகளை பாதுகாக்க உரிய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதம் நடைபெற்றது.

உண்ணாவிரதத்தின், முதல் நாளான செவ்வாய்க்கிழமை அரை நிா்வாணத்துடன் விவசாயிகள் உண்ணாவிரதத்தை தொடங்கினா்.

சங்கத்தின் மாவட்ட செயலா் பழனிச்சாமி, மாநில துணைத் தலைவா் தட்சிணாமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். லால்குடி, திருமலைசமுத்திரம், மண்ணச்சநல்லூா், கோனாா்பட்டி, பாகனூா், வாலையூா், வாழசீராமணி, வெள்ளக்கல்பட்டி, ஈச்சம்பட்டி, லாலாப்பேட்டை என திருச்சி, கரூா் மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பகுதி, மாவட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபடுவதாகத் தெரிவித்தனா். போராட்டத்தையொட்டி மாநகரக் காவல் துறை உதவி ஆணையா் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com