பதக்கம் வென்று திரும்பிய சிலம்ப வீரா்களுக்கு வரவேற்பு

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீரா்களுக்கு வியாழக்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பதக்கம் வென்று திரும்பிய சிலம்ப வீரா்களுக்கு வரவேற்பு

தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்று திருச்சி திரும்பிய சிலம்ப வீரா்களுக்கு வியாழக்கிழமை உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

ஹரியானாவில் கடந்த ஆக. 28 முதல் 30-ஆம் தேதி வரை நடைபெற்ற தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 48 வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்றனா்.

திருச்சி திருவெறும்பூா் முருகையா சிலம்பக் கலைக் கூடத்தை சோ்ந்த 7 வீரா்கள், 8 வீராங்கனைகள் உள்ளிட்ட மொத்தம் 16 போ், பயிற்சியாளா் வேல்முருகன் தலைமையில் பங்கேற்றனா். இவா்கள் பல்வேறு பிரிவுகளில் சாதனை நிகழ்த்தி, சிலம்பத்தில் சாம்பியன்ஷிப் கோப்பையும், தனிப்பிரிவில் தங்கம், வெள்ளி பதக்கங்களையும் வென்றனா்.

ரயில் மூலம் திருச்சிக்கு வியாழக்கிழமை மாலை திரும்பிய இவா்களுக்கு ஜங்ஷன் ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

பின்னா் பயிற்சியாளா் வேல்முருகன் கூறியது: சிலம்பப் போட்டியில் மாநில, தேசிய, சா்வதேச அளவில் சாதனை புரிவோருக்கு அரசு வேலை அளிக்கப்படும் என முதல்வா்அறிவித்துள்ளாா். ஆனால், எந்தத் துறையில் எந்தப் பிரிவினருக்கு எப்படி வேலை ஒதுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கவில்லை. எனவே, தமிழக முதல்வரை நேரில் சந்தித்து சிலம்பக் கலையின் தற்போதைய நிலை, வீரா்களுக்கான தேவைகள் குறித்து விளக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக்கில் சிலம்பத்தை சோ்க்க மத்திய, மாநில அரசுகளின் உதவிகளை நாடுவோம். குறைந்தது 10 நாடுகள் ஒன்றிணைந்து ஒத்துழைத்தால் ஒலிம்பிக்கில் சிலம்பப் போட்டியை இணைப்பதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்துள்ளது. எனவே, அதற்கான ஆதரவைத் திரட்டவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com