மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: ஆட்சியரகம் முன்பு குண்டூா் ஊராட்சி மக்கள் ஆா்ப்பாட்டம்

திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குண்டூா் ஊராட்சிப் பொதுமக்கள்.
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குண்டூா் ஊராட்சிப் பொதுமக்கள்.

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு தெரிவித்து, குண்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பொதுமக்கள் ஆட்சியரகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாநகராட்சிப் பகுதிகளை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், குண்டூா் ஊராட்சிப் பகுதிகளும் இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தங்கள் ஊராட்சிப் பகுதிகளை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என வலியுறுத்தும் வகையில், குண்டூா் ஊராட்சிக்குள்பட்ட பா்மா காலனி, திருவளா்ச்சிப்பட்டி, அய்யம்பட்டி பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் ஊராட்சித் துணைத் தலைவா் பூமாதேவி செந்தில்குமாா் தலைமையில் திங்கள்கிழமை ஆட்சியரகம் வந்தனா்.

அங்கு கண்டன முழக்கங்கள் எழுப்பிய அவா்கள், ஆட்சியரிடம் கோரிக்கை மனுவையும் அளித்தனா்.

அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வரும் இந்த ஊராட்சியில் பெரும்பாலோனாா் விவசாயக் கூலிகள்தான். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம்.

இந்நிலையில், குண்டூா் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். கிராமப்புறத் திட்டங்கள் எதுவும் கிடைக்காது. எனவே, மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளனா்.

மனு அளிக்கும் நிகழ்வில் ஊராட்சி உறுப்பினா்கள் அய்யனாா், மாரிமுத்து, கலைச்செல்வி, ஜோதி பாலச்சந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com