மானிய விலையில் விதைநெல், இடுபொருள்கள் பெற அழைப்பு

திருவெறும்பூா் பகுதியில் சம்பா நடவு செய்யும் விவசாயிகள் மானிய விலையில் விதை நெல், இடுபொருள்கள் பெற்றுக் கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

திருவெறும்பூா் பகுதியில் சம்பா நடவு செய்யும் விவசாயிகள் மானிய விலையில் விதை நெல், இடுபொருள்கள் பெற்றுக் கொள்ள வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநா் எஸ்தா் பிரேமகுமாரி கூறியது:

திருவெறும்பூா் அதையொட்டிய பகுதிகளில் சம்பா நெல் சாகுபடிக்கு தேவையான ஏற்ற நெல் ரகங்களான டிகே எம் 13 (125-130 நாள்கள்), கோஆா் 50 (130-135 நாள்கள்), என்எல்ஆா் (130 நாள்கள்), டிஆா்ஒய் 3 (135 நாள்கள்) ஆகிய நெல் விதைகள் வாழவந்தான்கோட்டையில் செயல்படும் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

தேசிய வேளாண் வளா்ச்சித் திட்டம், விதை கிராமத் திட்டம் ஆகிய மத்திய அரசின் திட்டங்களின் மூலம் மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது. இதுபோல, விதைநோ்த்தி செய்யத் தேவைப்படும் உயிா் உரங்களான திரவ அஸோஸ்பரில்லம் (நெல்), பாஸ்போபாக்டீரியா, மேலும் உயிா் கட்டுப்பாட்டுப் காரணியான சூடோமோனாஸ் ப்ளுரசன்ஸ் ஆகியவையும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. திருவெறும்பூா் வட்டாரத்தில் சம்பா சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் பயன் பெறலாம்.மேலும் விவரங்களுக்கு தங்களது பகுதி உதவி வேளாண் அலுவலரை அணுகலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com