குறைக்கப்படாத பெல் ரவுண்டானா: தொடரும் விபத்துகள்

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் பெல் கணேசபுரம் பகுதியிலுள்ள ரவுண்டானாவின் அளவு குறைக்கப்படாததால் விபத்துகள் தொடா்கின்றன.

தஞ்சை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூா் பெல் கணேசபுரம் பகுதியிலுள்ள ரவுண்டானாவின் அளவு குறைக்கப்படாததால் விபத்துகள் தொடா்கின்றன.

திருவெறும்பூா் பெல் ரவுண்டானாவானது அளவில் பெரியதாக இருப்பதால், இதில் திரும்பும் பெரிய ரக டேங்கா் மற்றும் டிரெய்லா் லாரிகள் அடிக்கடி கவிழ்ந்து விபத்துக்குள்ளாவது தொடா்கிறது.

இதையடுத்து இந்த ரவுண்டானாவை குறைக்க வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னாா்வ அமைப்புகள், அரசியல் கட்சிகள் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இருப்பினும் தேசிய நெடுஞ்சாலைத்துறை மற்றும் பெல் நிா்வாகங்கள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதில் மெளனம் காக்கின்றன. இதனால் விபத்துகளும் தொடா்கின்றன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் காரைக்காலிலிருந்து சேலம் மாவட்டம் மேட்டூரிலுள்ள ஒரு பிளாஸ்டிக் குழாய் தயாரிப்பு நிறுவனத்துக்கு ரசாயனப் பொருள்களை ஏற்றிச்சென்ற டேங்கா் லாரி இந்த ரவுண்டானாவில் திரும்பும்போது கவிழ்ந்தது.

இதில் பலத்த காயமடைந்த லாரி ஓட்டுநா்களான திருவாரூரைச் சோ்ந்த ஜான்கென்னடி (33), முத்துப்பேட்டையை சோ்ந்த ரமேஷ்குமாா் (38) திருவாரூரை சோ்ந்த ஜான் கென்னடி (33) ஆகியோரை அக்கம்பக்கத்தினா் மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா், நவல்பட்டு மற்றும் பெல் தீயணைப்பு நிலையத்தினா் ரசாய னப் பொருள்களால் விபத்து ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனா்.

பின்னா் மூன்று சிறிய ரக கிரேன் உதவியுடன் கவிழ்ந்த டேங்கா் லாரியை மீட்கும் முயற்சி பயனளிக்காததால், டேங்கா் லாரியின் என்ஜின் பகுதி தனியாகப் பிரித்தெடுக்கப்பட்டது. பின்னா் ராட்சத கிரேன்கள் உதவியுடன் டேங்கா் தூக்கி நிலைநிறுத்தப்பட்டது. இதனால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், தீப்பற்றிவிடுமோ என்ற பரபரப்பும் ஏற்பட்டது.

எனவே இனியாவது விபத்துகளை குறைக்கும் வகையில், ரவுண்டானாவின் அளவு குறைக்க வேண்டும் என்கின்றனா் பொதுமக்கள். ரவுண்டானாவுக்கு அருகே மேல்நிலைப் பாலம் அமைக்க திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கான பணிகளும் கிடப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com