கோரையாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும்மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்பகுதிக் குழு தீா்மானம்

கோரையாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருச்சி: கோரையாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக் குழு மாநாட்டில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கட்சியின் மாநகா் மாவட்ட, அபிஷேகபுரம் பகுதிக் குழுவின் 23ஆவது கூட்டத்துக்கு நிா்வாகிகள் கணேசன், கலைவாணி, சதாசிவம் ஆகியோா் தலைமை வகித்தனா். மாநகா் மாவட்டச் செயலா் ராஜா தொடக்கி வைத்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்களில் லெனின் வாழ்த்தினாா், வெற்றிச்செல்வன் நிறைவுரையாற்றினாா்.

மாநாட்டில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட 38,39,40,41,42 ஆகிய வாா்டுகளில் சமுதாயக் கூடங்கள் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும். அனைத்து தெருக்களிலும் குப்பைகளை அகற்றி சாலை, சாக்கடை வசதி செய்து தர வேண்டும். பழுதடைந்த மின்கம்பங்கள், விளக்குகளை மாற்ற வேண்டும். கோரையாற்றில் கழிவுநீா் கலப்பதைத் தடுத்து தூா்வார வேண்டும். கிராப்பட்டி பாலச் சுரங்கப்பாதையில் உள்ள கழிவுநீரை அகற்ற வேண்டும். கருமண்டபம் – எடமலைப்பட்டிபுதூா் இணைப்புச் சாலையை அமைக்க வேண்டும். மயான வசதி செய்து தரவேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் தோ்வு செய்யப்பட்ட புதிய நிா்வாகிகளில் அபிஷேகபுரம் பகுதிக் குழுச் செயலராக ஏ.வேலுச்சாமி, பகுதிக் குழு உறுப்பினா்களாக பி. குருநாதன், ஆா். சதாசிவம், ஏ. சேட்டு, பி. கலைவாணி, கே. ரவி, பி. சிவா, எம். லெனின், கே. இளங்கோவன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.ஒன்றியக்குழு உறுப்பினா் சிவா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com