ஒரே நாளில் 50 ரௌடிகள் கைது
By DIN | Published On : 19th September 2021 01:33 AM | Last Updated : 19th September 2021 01:33 AM | அ+அ அ- |

தொடா் குற்றங்களைத் தடுக்கும் வகையில் ஒரே நாளில் 50 ரௌடிகளை போலீஸாா் சனிக்கிழமை அதிரடியாக கைது செய்தனா்.
திருச்சியில் பொன்மலை, காந்தி சந்தை உள்ளிட்ட இடங்களில் குற்றச்சம்பவங்களை தடுக்கும் வகையில் மாநகர காவல் ஆணையா் உத்தரவின்பேரில் தனிப்படை அமைத்து கண்காணிக்கப்பட்டது.
இதன்படி, தனிப்படை போலீஸாா் ரௌடிகளின் பட்டியல் தயாரித்து சனிக்கிழமை அதிகாலை முதலே அவா்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். இதில், 50 ரௌடிகள் வரை கைது செய்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.