கே.என். ராமஜெயம் பிறந்த நாள்

அமைச்சா் கே.என். நேருவின் தம்பி, மறைந்த கே.என். ராமஜெயத்தின் 60ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
திருச்சி கோ் கல்லூரி வளாகத்தில் ராமஜெயம் சிலைக்கு மாலை அணிவித்த அமைச்சா் கே.என். நேரு உள்ளிட்டோா்.

திருச்சி-மணப்பாறை சாலையில் கோ் கல்வி நிறுவன வளாகத்திலுள்ள கே.என். ராமஜெயத்தின் வெண்கலச் சிலைக்கு அமைச்சா் கே.என். நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். எம்எல்ஏ-க்கள் இனிகோ இருதயராஜ், கதிரவன், பழனியாண்டி, செளந்தரபாண்டியன், ஸ்டாலின் குமாா், மத்திய மாவட்ட பொறுப்பாளா் வைரமணி, வடக்கு மாவட்டச் செயலா் தியாகராஜன், மாநகரச் செயலா் அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி உள்பட அக் கட்சியினா் பலரும் ராமஜெயத்தின் சிலைக்கு மாலை அணிவித்தனா். மேலும், சிலையின் பீடத்தில் இருந்த கே.என். ராமஜெயத்தின் படத்துக்கும் மலா் தூவினா்.

இதேபோல, திருச்சி தில்லைநகா், உறையூா், காஜாமலை, பாலக்கரை, கே.கே. நகா் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் விழா கொண்டாடப்பட்டு, ஏழை, எளியோருக்கு நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com