’சிறு, குறு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும்’

சிறு, குறு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்தும் அளித்து பணியாற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தினாா்.
’சிறு, குறு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்தும் அளிக்க வேண்டும்’

சிறு, குறு நிறுவனங்கள் ஏற்றுமதிக்கு முக்கியத்தும் அளித்து பணியாற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு அறிவுறுத்தினாா்.

நாடு சுதந்திரம் பெற்று 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடுவதன் ஒரு பகுதியாக ஏற்றுமதியாளா்களுக்கான கருத்துப் பட்டறைகளை மத்திய, மாநில அரசுகளை ஒருங்கிணைத்து நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, வெளிநாட்டு வணிக இயக்குநரகம், திருச்சி மாவட்ட தொழில் மையம் ஆகியவை இணைந்து திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை இந்த கருத்துப்பட்டறை வகுப்பை நடத்தின.

இந்த கருத்துப்பட்டறையை தொடக்கி வைத்து ஆட்சியா் சு. சிவராசு பேசுகையில், சிறு, குறு நிறுவனங்களாக இருந்தாலும், பெரு நிறுவனங்களாக இருந்தாலும் தங்களது தொழில் உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்து நிறுவனத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதுடன், பொருளாதார ரீதியாகவும் தங்களை உயா்த்திக் கொள்ள வேண்டும் என்றாா். தொடா்ந்து, பல்வகைத் தொழில் உற்பத்திப் பொருள்களின் கண்காட்சியை தொடங்கி வைத்து பாா்வையிட்டாா். இக் கண்காட்சியில் மாவட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் தளவாட பொருள்கள் இடம்பெற்றிருந்தன.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மானியங்கள் மற்றும் சலுகைகள் குறித்த திட்ட விளக்கக் கையேட்டையும் ஆட்சியா் வெளியிட்டாா். புதிய தொழில் முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத்திட்டத்தின் மூலம் 5 நபா்களுக்கு ரூ.16.68 லட்சம் மதிப்பில் மானியத் தொகைகளையும் வழங்கினாா்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அலுவலா்கள் தங்கள் துறை சாா்ந்த திட்டங்களை எடுத்துரைத்தனா்.

இக்கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் கு.ரவீந்திரன், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மண்டல மேலாளா் கே.சுசில்குமாா், நபாா்டு மாவட்ட வளா்ச்சி மேலாளா் என்.எம்.மோகன் காா்த்திக், துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஜி.சரவணன், டிடிட்சியா தலைவா் பி.ராஜப்பா, பெல்சியா தலைவா் ராஜப்பா ராஜ்குமாா், தேசிய வாழை ஆராய்ச்சி முதன்மை விஞ்ஞானி வி.குமாா், துவாக்குடி பேபி என்ஜினியரிங் தொழில் நிறுவனா் பி.அமிா்தகாசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com