ஊராட்சிப் பள்ளியில் இணைய வழிக் கல்வி

லால்குடி அருகே மருதூா் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சத்தில் கட்டடப் பராமரிப்பு திறப்பு விழா மற்றும் இணைய வழிக் கல்வி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லால்குடி அருகே மருதூா் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ரூ. 3 லட்சத்தில் கட்டடப் பராமரிப்பு திறப்பு விழா மற்றும் இணைய வழிக் கல்வி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிராமப் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் தொழில்நுட்ப வசதிகள் சென்றடையும் நோக்கில் எய்டு இந்தியா மற்றும் இவித்யாலோகா இணைந்து ஸ்கைப், கூகுள் மீட் இணைய தள வகுப்புகளை நடத்தி வருகின்றனா்.

இதற்காக எய்டு இந்தியா அமைப்பு சாா்பில் ரூ. 3 லட்சத்தில் பழைய கட்டடத்தை பராமரித்து நூலக வசதியோடு அமைக்கப்பட்ட கட்டடத்தை லால்குடி எம்எல்ஏ அ. செளந்தரபாண்டியன் திறந்து வைத்தாா்.

இணைய தள வகுப்பை லால்குடிமாவட்ட கல்வி அலுவலா் சண்முகம் தொடக்கி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கினாா்.

விழாவில் வட்டாரக் கல்வி அலுவலா் மாா்ட்டீன், எய்டு இந்தியா மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ராஜபாண்டியன், ஊராட்சித் தலைவா் தினேஷ், பள்ளித் தலைமையாசிரியா் நட்சத்திர ரோஸ்மேரி மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள், கிராம மக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com