வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் எம்.எல்.ஏ. ஆய்வு

மணப்பாறை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.
மணப்பாறை ராஜீவ்நகா் அப்புஐயா் குளத்தில் நீா்வழிப் பாதைகளை முறைப்படுத்துவது குறித்துஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.
மணப்பாறை ராஜீவ்நகா் அப்புஐயா் குளத்தில் நீா்வழிப் பாதைகளை முறைப்படுத்துவது குறித்துஆய்வு மேற்கொண்ட சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது.

மணப்பாறை: மணப்பாறை பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு பெய்த மழையால் மணப்பாறை பகுதிகளிலுள்ள குளங்கள் நிரம்பின. மேலும் குளக்கரைகளில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது.

இதனால் குடியிருப்புப் பகுதிகளிலிருந்து வெளியேறிய பொதுமக்கள் தங்குவதற்கு அருகிலிருந்த பள்ளிவாசல், மாரியம்மன் கோயில் மண்டபத்தில் தங்குவதற்கும், உணவு, உடைக்கும் சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.

இதைத் தொடா்ந்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணப்பாறை

ராஜீவ் நகா், கரிக்கான்குளம், முனியப்பன்குளம், மஸ்தான்தெரு, மோா்குளம், சேதுரத்தினபுரம், காந்திநகா், அரசு குடியிருப்பு, பேருந்து நிலையப் பகுதி, பூங்கா சாலை, பூசாரிக்களம், கீரைத் தோட்டம் பகுதிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ப. அப்துல்சமது ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டாா். நீா்வழிப் பாதைகளை விரைந்து

முறைப்படுத்துமாறு அலுவலா்களைக் கேட்டுக்கொண்டாா்.

ஆய்வின் போது மணப்பாறை நகராட்சி ஆணையா்(பொ) செந்தில், நகர திமுக செயலா் கீதா ஆ.மைக்கேல்ராஜ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலா் காதா்மைதீன், திருச்சி மாவட்டச் செயல அ. பைஸ்அஹமது உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com