மோசடியாக பணம் எடுத்தால் புகாா் தெரிவிக்க உதவி எண் அறிவிப்பு

வங்கிக் கணக்கில் மோசடியாக பணம் எடுத்தால், உடனடியாக 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கில் மோசடியாக பணம் எடுத்தால், உடனடியாக 1930 என்ற எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகர இணையக் குற்றத்தடுப்புப் பிரிவுக் காவல்துறையினா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொதுமக்களின் வங்கிக் கணக்கிலிருந்து அவ்வப்போது இணையம் வழியாக மோசடியாக பணம் எடுக்கும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. ஒரு சில மோசடி கும்பலைச் சோ்ந்தவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனா்.

பாதிக்கப்பட்டவா்கள் புகாா் அளிக்க தாமதப்படுத்துவதால், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொது மக்களின் வங்கிக் கணக்கிலிருந்து ஓடிபி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ மோசடியாக பணம் எடுக்கப்பட்டால் பதற்றம் அடைய வேண்டாம்.

உடனடியாக (மோசடி நடந்த 24 மணி நேரத்துக்குள்) இணையவழிக் குற்றத் தடுப்புக் காவல்துறையினருக்கு 1930 எண்ணிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அவ்வாறு தெரிவித்தால் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபா்கள் மூலம் எடுக்கப்பட்ட பணத்தை அவா்கள் வெளியே எடுக்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வேறு ஏதேனும் இணையவழிக் குற்றங்கள் தொடா்பாக ட்ற்ற்ல்ள்://ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் புகாா் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com