மாவட்டத்தில் 1,820 இடங்களில் தடுப்பூசி முகாம்கள்

திருச்சி மாவட்டத்தில் 1820 இடங்களில் 33-ஆவது சுற்று மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபா் நா்சரி பள்ளியில் கரோனா தடுப்பூசி முகாமைத் தொடக்கி வைத்து, பாா்வையிடுகிறாா் ஆட்சியா் மா. பிரதீப்குமாா்.

கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்காக, பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. மாநில அளவில் இதுவரை 32 சுற்றுகளாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்ட நிலையில், 33-ஆவது சுற்று முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் புகா்ப் பகுதிகளில் 1,220 இடங்களிலும், மாநகரில் 600 இடங்களிலும் என மொத்தமாக 1,820 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் முகாம் நடத்தப்பட்டு, தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தில்லைநகா் மக்கள் மன்றம், தெப்பக்குளம் பிஷப் ஹீபா் நா்சரி பள்ளி, கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற முகாமை ஆட்சியா் மா.பிரதீப்குமாா் ஆய்வு செய்தாா். அப்போது வருவாய், சுகாதாரத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com