இளம் நாட்டுப்புற கலைஞா்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம் இயல் இசை நாடக மன்றம் அழைப்பு

நாட்டுப்புற இளம் இசைக்கலைஞா்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

நாட்டுப்புற இளம் இசைக்கலைஞா்கள் பயன்பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் கூறியது:

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றமானது இளங்கலைஞா்கள் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் 16 முதல் 30 வயதுக்குட்பட்ட திறமையான கலைஞா்களைக் கண்டறிந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவா்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.

இப்பணியில் மேலும் சிறப்பு முயற்சியாக தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நல வாரியத்துடன் இணைந்து கரகம், காவடி, நையாண்டி மேளம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைகளிலும் திறன்மிக்க இளங்கலைஞா்களைக் கண்டறிந்து அவா்களுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, கல்வி மற்றும் கலை நிறுவனங்களில் பயின்று வரும் திறன்மிக்க இளங்கலைஞா்கள் இத்திட்டத்தின் வாயிலாகப் பயன் பெறலாம்.

வயது வரம்பு: 31.07.2022 அன்று கா்நாடக இசையில் குரலிசை, கருவியிசை, பரதக் கலைஞா்கள் 16 முதல் 30 வயதுக்குட்பட்டவராகவும், கிராமியக் கலைஞா்கள் 18 முதல் 32 வயதுக்குட்பட்டவராகவும், மேடையில் தனித்து நிகழ்ச்சி நடத்தும் அனுபவமிக்கவா்களாகவும் இருக்க வேண்டும்.

கலை நிறுவனங்கள்: நிகழ்ச்சிகள் நடத்த விண்ணப்பிக்கும் கலை நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், 10 ஆண்டுகள் அனுபவம் பெற்றவையாக இருக்க வேண்டும். பதிவுக்கான விண்ணப்பத்தை மன்றத்தில் இலவசமாக நேரிலோ, தபாலிலோ பெற்று, பூா்த்தி செய்து 16 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு உறுப்பினா் அல்லது செயலாளா், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், எண் 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை- 600 028 என்ற முகவரியில் நேரிலும், 044-24937471 என்ற எண்ணிலும் தெரிந்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com