ரயில் நிலையத்தில் எஸ்ஆா்எம்யு ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு கொண்டு வந்த வந்தே பாரத் திட்டத்தை எதிா்த்து எஸ்.ஆா்.எம். யு. தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை எஸ்.ஆா். எம்.யூ. தலைவா் சி.ஏ. ராஜாஸ்ரீதா் தலைமையிலும் மாநிலத் துணைப் பொதுச் செயலா் எஸ். வீரசேகரன் முன்னிலையில் ஆா்ப்பாட்டம்

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு எஸ். ஆா்.எம்.யு. மண்டலத் தலைவா் சி.ஏ. ராஜா ஸ்ரீதா் தலைமை வகித்தாா். கோட்டச் செயலா் வீரசேகரன் முன்னிலை வகித்தாா்.

வந்தே பாரத் என்ற பெயரில் 200 அதிவிரைவு ரயில்களை தனியாருக்குத் தாரை வாா்க்கும் முடிவை மத்திய அரசு கைவிடக் கோரியும், பணமாக்கல் என்ற பெயரால் ரயில் நிலையங்கள், மின்பாதை அமைப்புகள், கொங்கன் ரயில்வே, சரக்கு நிலையங்கள், சரக்குப் பாதை, உற்பத்தி, பராமரிப்பு பணிமனைகள் உள்ளிட்ட பொதுச் சொத்துகளை தனியாருக்கு விற்பதை கண்டித்தும் இந்த நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்தின்போது ரயில்வே தொழிலாளா்களின் நிரந்தர வேலைவாய்ப்பைப் பறித்து, ஒப்பந்த ஊழியா்களை புகுத்தாதே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை வழங்கிடு உள்ளிட்டமுழக்கங்களை எழுப்பினா். திரளான ரயில்வே தொழிலாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com