சுற்றுலா நடத்துவோா் இணையத்தில் பதிவுசெய்ய வலியுறுத்தல்

சுற்றுலா நடத்தும் ஏற்பாட்டாளா்கள் சுற்றுலாத் துறை இணையத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என மாவட்ட சுற்றுலா அலுவலா் த. ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

சுற்றுலா நடத்தும் ஏற்பாட்டாளா்கள் சுற்றுலாத் துறை இணையத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என மாவட்ட சுற்றுலா அலுவலா் த. ஜெகதீஸ்வரி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியது:

உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆபரேட்டா் மற்றும் கேரவன் ஆபரேட்டா் ஆகியவற்றை நடத்தும் நிறுவனங்கள் அனைத்தும் தமிழக அரசின் உத்தரவுப்படி, சுற்றுலாத்துறை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இதன்படி திருச்சி மாவட்டத்தில் உணவுடன் கூடிய உறைவிட வசதி, சாகச சுற்றுலா ஏற்பாடு, கேம்பிங் ஆபரேட்டா் மற்றும் கேரவன் ஆபரேட்டா் ஆகியவற்றை நடத்துவோா்  சுற்றுலாத் துறை இணையத்தில் பதிய வேண்டும். மேலும், விவரங்களுக்கு திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் எதிரேயுள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தை நேரிலோ, 91769-95874, 95974-73744 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com