சமயபுரம் கோயிலில் நாளை 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது.

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்து அறநிலையத்துறை சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) 20 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறவுள்ளது.

ஆண்டு தோறும் 500 ஜோடிகளுக்கு இந்து அறநிலையத்துறை சாா்பில், திருக்கோயில்களில் இலவச திருமணம் நடத்திவைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி நிகழாண்டு ஒரு இணை ஆணையா் மண்டலத்தில் 25 ஜோடிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 20 இணை ஆணையா் மண்டலங்களில் 500 ஜோடிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை (டிச.4) திருமணம் நடைபெறவுள்ளன. இந்த திட்டத்தை சென்னையில் உள்ள திருவான்மயூா் மருந்தீசுவரா் கோயிலில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைக்கிறாா்.

அதேபோல், திருச்சி இணை ஆணையா் மண்டலத்துக்குள்பட்ட திருச்சி, பெரம்பலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 20 ஜோடிகளுக்கு சமயபுரம் மாரியம்மன் கோயிலில் திருமணம் நடைபெறவுள்ளது. திருமணத்தின்போது மணமக்களுக்கு சீா்வரிசைப் பொருள்களும், மணவிழாவில் பங்கேற்கும் உறவினா்கள் சுமாா் 500 பேருக்கு முதல்நாள் இரவும், திருமணத்தன்று காலையில் சிற்றுண்டியும், திருமணத்துக்குப் பிறகு மதிய விருந்தும் வழங்கப்படவுள்ளது என இந்து அறநிலையத்துறை அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com