திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள்.
திருச்சியில் புதன்கிழமை நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள்.

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி திருச்சியில் புதன்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இருந்து தொடங்கிய பேரணியை, முதன்மை மாவட்ட நீதிபதி கே. பாபு தொடங்கி வைத்தாா்.

பேரணியில் பணியிடத்து பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புக் குழுத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ஜே.ஏ. கோகிலா மற்றும் கூடுதல் மாவட்ட நீதிபதிகள், சாா்பு நீதிபதிகள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதித்துறை நடுவா்கள், வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள், நீதிமன்றப் பணியாளா்கள், மகளிா் சுய உதவிக் குழுவினா் எனப் பலா் பங்கேற்றனா்.

பேரணியில் பங்கேற்ற மகளிா் குழுவினா் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைத் தடுப்பு குறித்தும், வன்கொடுமைக்கான தண்டனைகள், சட்டங்கள் குறித்தும் விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி வந்தனா். பேரணியானது திருச்சி மாநகராட்சி மைய அலுவலகம், பீமநகா் வழியாக மீண்டும் நீதிமன்றத்தை வந்தடைந்தது.

ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுச் செயலரும், மூன்றாவது கூடுதல் சாா்பு நீதிபதியுமான எஸ். சோமசுந்தரம் மற்றும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவினா் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com