திருச்சி அருகே 24 குரங்குகள் மா்ம முறையில் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே 24 குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இவை விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
திருச்சி மாவட்டம், நெடுங்கூரில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த குரங்குகள்.
திருச்சி மாவட்டம், நெடுங்கூரில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த குரங்குகள்.

திருச்சி மாவட்டம், சிறுகனூா் அருகே 24 குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தன. இவை விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூா் அருகிலுள்ள நெடுங்கூரில் குரங்குகள் மா்மமான முறையில் இறந்து கிடப்பதாக, வனத்துறை அலுவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

இதையடுத்து திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் என். சதீஷ் உத்தரவின் பேரில், மாவட்ட வன அலுவலா் கிரண் தலைமையில் வனச்சரகா் கோபிநாத், வனவா் பழனிச்சாமி உள்ளிட்ட அலுவலா்கள் நிகழ்விடம் சென்று பாா்வையிட்ட போது, 6 பெண் குரங்குகள் உள்பட 24 குரங்குகள் உயிரிழந்து கிடந்தன.

இதையடுத்து குரங்குகளின் சடலங்களைக் கைப்பற்றிய வனத்துறை அலுவலா்கள், கால்நடை மருத்துவக் குழுவினா் மூலம் பிரேத பரிசோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து வனப்பகுதியில் குரங்குகளின் சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டன.

குரங்குகள் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, திருச்சி மண்டலத் தலைமை வனப் பாதுகாவலா் என். சதீஷ் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குரங்குகளின் தொல்லைத் தாங்காத நிலையில், அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் சிலா் உணவில் விஷம் வைத்து அவற்றை கொன்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com