வாய்க்காலில் தேங்கிய குப்பைக் கழிவுகள் அகற்றம்

திருச்சி ஜி- காா்னா் பகுதியிலிருந்து பொன்மலைக்கு செல்லும் வாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுகள், குப்பைகள் ஜேசிபி இயந்திரம் மூலம் தூா்வாரி அகற்றப்பட்டன.
பொன்மலைப்பட்டி செல்லும் சாலையிலுள்ள வாய்க்காலில் தேங்கிய கழிவுநீரை அகற்றும் பணியைப் பாா்வையிடும் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் ஆா். வைத்திநாதன்.

திருச்சி மாநகரின் பிரதான பகுதியாக உள்ள பொன்மலைப்பட்டிக்கு செல்லும் ஜி. காா்னா் பகுதி வாய்க்காலில் சில இடங்களில் மட்டுமே தூா்வாரப்பட்டு பணிகள் அரைகுறையாக நடந்திருப்பதாகப் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். இதனால் சுற்றுப் பகுதிகளில் இருந்து வரும் கழிவு நீா், மழைநீா் இப் பகுதியில் தேங்குகிறது. கழிவுநீருடன், குப்பைக் கழிவுகள், நெகிழி பொருள்கள் மற்றும் மாநகரக் கழிவுகள் பலவும் தேங்கி துா்நாற்றம் வீசுவதாக அப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இது அமைச்சா் கே.என். நேருவின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து அமைச்சரின் அறிவுரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா், மாநகராட்சி ஆணையா் இரா. வைத்திநாதன் ஆகியோா் தொடா்புடைய வாய்க்கால் பகுதியை சனிக்கிழமை சென்று பாா்வையிட்டு, துப்புரவுப் பணியாளா்கள் மற்றும் ஜேசிபி இயந்திரம் கொண்டுவரப்பட்டு வாய்க்காலில் தேங்கிய கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனா். மேலும், இப் பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com