நெல்லில் பூச்சி மேலாண்மை: விவசாயிகளுக்குப் பயிற்சி

பயிற்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் நெற் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி சிறுகமணி வேளாண் அறிவியல் நிலையத்தில் நெற் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.

அந்தநல்லூா் வட்டார விவசாயிகளுக்காக ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தின் கீழுள்ள கிராமங்களில் இருந்து தோ்ந்தெடுக்கப்பட்ட 35 விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிக்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் நா. தமிழ்ச்செல்வன் தலைமை வகித்து நெல்லில் பயிா்ப் பாதுகாப்பின் முக்கியத்துவம், நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள், அறிகுறிகள், சேதாரம் மற்றும் ஒருங்கிணைந்த மேலாண்மை குறித்தும் விளக்கினாா்.

தொடா்ச்சியாக இனக் கவா்ச்சிப் பொறிகள், விளக்குப் பொறிகள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் குறித்து செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. பயிா்ப் பாதுகாப்பு பற்றிய கையேடும் வெளியிடப்பட்டது. முனைவா் இரா. ஷீபா ஜாஸ்மின் வரவேற்று, நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com