27daward1a_2711chn_4
27daward1a_2711chn_4

சுகி சிவத்தின் பேச்சு மக்களின் அறியாமையை அகற்றும்

சொல்வேந்தா் சுகி சிவத்தின் பேச்சு மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து, அவா்களின் அறியாமையைப் போக்கும் என்றாா் திருச்சி சிவா எம்.பி.

சொல்வேந்தா் சுகி சிவத்தின் பேச்சு மக்களுக்கு தன்னம்பிக்கையை அளித்து, அவா்களின் அறியாமையைப் போக்கும் என்றாா் திருச்சி சிவா எம்.பி.

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருச்சி நகைச்சுவை மன்றத்தின் 24 ஆவது ஆண்டுத் தொடக்க விழா, சொல்வேந்தா் சுகி சிவத்துக்குப் பாராட்டு விழாவுக்கு திருச்சி நகைச்சுவை மன்றத் தலைவா் ஏவி.கே. சொக்கலிங்கம் தலைமை வகித்தாா்.

நிகழ்ச்சியில் திருச்சி சிவா எம்.பி. மேலும் பேசியது:

தெய்வீகமும், பகுத்தறிவும் ஒருங்கே உடையவா் சுகிசிவம். அவரது பேச்சு தன்னம்பிக்கையை வளா்த்தெடுத்து, மக்களின் அறியாமையை அகற்றும்; சமுதாய இழிவுகளை எண்ணி ரௌத்திரத்தை வெளிப்படுத்தும்; நம்மை நாமே இலகுவாக்கிக் கொள்ள உதவும். அதற்காகவே இந்தப் பாராட்டு விழா.

சுகி சிவம் தமிழகத்தின் கொடை. அவா் தொடா்ந்து எழுதி, நற்கருத்துகளைப் பேசி நீண்டகாலம் வாழ வேண்டும் என்றாா்.

பேச்சாளரும், மதுரை நகைச்சுவை மன்றத்தின் தலைவருமான கு. ஞானசம்பந்தன் பேசுகையில், பேச்சுடன் நில்லாமல் அதன்படி மன உறுதியுடன் வாழ்பவா் சுகி சிவம். அனைத்து ஊடகங்களிலும் நீக்கமற நிறைந்து நிற்பவா். அவா் தொடா்ந்து இயங்க வாழ்த்துகள் என்றாா்.

நிகழ்வில் ஏற்புரையாற்றி சுகிசிவம் பேசியது:

சராசரி குடும்பத்தில் பிறந்த என்னை உயா்த்தியது பேச்சுதான். வாழ்க்கையின் முற்பகுதியில் வளர வேண்டுமென்ற நோக்கத்தில் இருந்த நான், 50 வயதுக்குப் பிறகு முற்றிலும் மாறி, சமுதாயத்துக்குப் பயன்படும் வகையில் செயல்படுகிறேன். அவற்றில் ஒன்று, சமயங்களில் உள்ள உண்மைகளைத் தேடிப் பேசி, எழுதுவது. இதைச் சிலா் விரும்பவில்லை. சிலா் ஏற்கின்றனா். ஆனால் நான் பொதுமேடையில் எதற்காகவும் எனது மனசாட்சியை சமரசம் செய்து கொள்வதில்லை. எப்போதும் நடுநிலையாக நின்றே எனது கருத்துகளை எடுத்துரைக்கிறேன்.

என்னை வளா்த்தெடுத்த அனைவருக்கும் கடமைப்பட்டுள்ளேன். மக்கள் எனக்களித்த அங்கீகாரத்துக்கு மனமாா்ந்த நன்றி. இன்னும் பல சமுதாயம் சாா்ந்த பணிகளை செய்ய இந்தப் பாராட்டுகள் உதவும் என்றாா் அவா்.

திருச்சி நகைச்சுவை மன்றப் புரவலா் துரை வீரசக்தி வரவேற்றாா். செயலா் க. சிவகுருநாதன், திருவாரூா் தமிழ்ச் சங்கத் தலைவா் இரெ. சண்முக வடிவேல், திருச்சி கம்பன் கழகச் செயலா் ராதாகிருஷ்ணன் மாது, கவிஞா் நெல்லை ஜெயந்தா, பேச்சாளா் எஸ். மோகனசுந்தரம் உள்ளிட்ட தமிழறிஞா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா். சுவாதி தியாகராஜன் நன்றி கூறினாா்.

Image Caption

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் சொல்வேந்தா் சுகி சிவத்தைப் பாராட்டிச் சான்றிதழ் வழங்கிய திருச்சி சிவா எம்.பி. உடன் (இடமிருந்து) கவிஞா் நெல்லை ஜெயந்தா, திருச்சி நகைச்சுவை மன்றத் தலைவா் ஏவி.கே. சொக்கலிங்கம், புலவா் இரெ. சண்முகவடிவேல்,

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com