ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் நூதனப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன்பு தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் பொ. அய்யாக்கண்ணு தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் மேகராஜன் முன்னிலை வகித்தாா்.முன்னதாக ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, விவசாயிகள் தரையில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து தலையில் முக்காடு அணிந்தவாறு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தால் ஆட்சியரக நுழைவு வாயிலின் ஒரு பாதை மூடப்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினா், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி, ஆட்சியரை சந்திக்க ஏற்பாடு செய்தனா்.

ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துவிட்டு வந்த பெ. அய்யாக்கண்ணு செய்தியாளா்களிடம் கூறியது:

விவசாயிகள் என்றால் நிலம் வைத்திருப்பவா்களும்,

குத்தகைக்கு நிலம் உழவு செய்யும் விவசாயிகளும், விவசாய நிலத்தில் கூலி வேலை செய்பவா்களும், அடமானம் வாங்கி விவசாயம் செய்யும் விவசாயிகளும் ஒன்றுதான்.

ஆனால், மத்திய அரசு யாா் பெயரில் நிலம் உள்ளதோ அவா்கள் மட்டும் உண்மையான விவசாயிகள், மற்றவா்கள் உண்மையான விவசாயிகள் அல்ல, பட்டா நிலம் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ரூ. 6 ஆயிரம் வழங்கப்படும் என்கிறது.

மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே வழங்கப்படும் என்கின்றனா். ஒரே குடும்பத்தில் அரசு ஊழியா்கள் பலா் இருந்தாலும் அவா்கள் பணி ஓய்வுக்குப் பிறகு அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. எனவே, அனைத்து விவசாயிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும்.

வாழை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு கடன் வழங்க மறுப்பதுடன், கடன் வழங்கிய பிறகு சூறாவளிக் காற்றால் வாழை ஓடிந்துவிடக் கூடாது என்பதற்காக 1000 சவுக்கு வாங்குவதற்கு ரூ.13,500 வழங்கப்படுவது போதுமானதாக இல்லை.

இந்தியாவிலுள்ள விவசாயிகளுக்கு லாபகரமான விலை கொடுக்காமல் மத்திய அரசு ஏமாற்றி வருகிறது. கோயில் நிலங்களை தலைமுறை தலைமுறையாக விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் கிடையாது என்பதை ஏற்க முடியாது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com