குமுளூா் அரசு கல்லூரியில் நூல் மதிப்புரை

லால்குடி அருகிலுள்ள குமூளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் மதிப்புரை நடைபெற்றது.

லால்குடி அருகிலுள்ள குமூளூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நூல் மதிப்புரை நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு கல்லூரி முதல்வா் கி. மாரியம்மாள் தலைமை வகித்தாா். புத்தக மைய ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ராஜா, பேராசிரியா்கள் சாமிநாதன், ஜெயபிரகாஷ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

ழுத்தாளா் வண்ணதாசனின் ஒரு சிறு இசை (சிறுகதைத் தொகுப்பு ) என்ற நூலை முதுகலை இரண்டாமாண்டு மாணவி க. அபிராமியும், கல்கியின் பாா்த்திபன் கனவு நூலை மூன்றாமாண்டு தமிழிலக்கிய மாணவா் ந. முருகனும் மதிப்புரை செய்தனா்.

முன்னதாக, பேராசிரியை நிஷா ஜெயசீலி வரவேற்றாா். நிறைவில், பேராசிரியை சுகன்யா நன்றி கூறினாா்.

பேராசிரியா்கள் ஜெய்சங்கா், அசோக், ராஜா, சின்னத்தம்பி, மணிவண்ணன், தீபாதேவி உள்ளிட்டோா், மாணவ, மாணவிகள் நிகழ்வில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com