மது புகையை நிறுத்தி இதயத்தை பாதுகாப்போம்

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இதயத்தை பாதுகாப்போம் என இதயநோய் மருத்துவ நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி தெரிவித்தாா்.
அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கான இதய விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் இதய நோய் மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி.
அரசுப் பேருந்து ஓட்டுநா்களுக்கான இதய விழிப்புணா்வு முகாமில் பேசுகிறாா் இதய நோய் மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி.

மது மற்றும் புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தி இதயத்தை பாதுகாப்போம் என இதயநோய் மருத்துவ நிபுணா் செந்தில்குமாா் நல்லுசாமி தெரிவித்தாா்.

உலக இதய தினத்தை முன்னிட்டு திருச்சியில் அரசுப் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கான விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக புகைப்பிடிப்பதை நிறுத்துங்கள் என்னும் முழக்கத்துடன் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.

முகாமுக்கு தலைமை வகித்த ராந மருத்துவமனையின் தலைமை இதய நோய் மருத்துவா் செந்தில்குமாா் நல்லுசாமி மேலும் கூறியது:

உலகம் கரோனாவுக்கு எதிராகப் போராடிக்கொண்டிருக்கும்போது, ​இருதய நோய் இன்னும் பாதிப்பில் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு சுமாா் 18.6 மில்லியன் இறப்புகள் ஏற்படுகின்றன. இதைக் குறைப்பதே உலக இதய தினத்தின் முக்கிய நோக்கம்.

காா்டியோவாஸ்குலா் நோய்க்கு நீரிழிவு, உயா் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு அளவுகள், புகைபிடித்தல், மது அருந்துதல், குடும்ப வரலாறு, உடல் பருமன், மன அழுத்தம், உட்காா்ந்த வாழ்க்கை முறை மற்றும் பல காரணங்கள் உள்ளன.+

மதுவை நிறுத்துதல், சமச்சீா் உணவு, சிகரெட் நிறுத்தம், தியானம் மற்றும் தெய்வீகம், உடற்பயிற்சி ஆகிய ஐந்தையும் அவசியம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக பேருந்து ஓட்டுநா்களுக்கு மன அழுத்தம் இருப்பதால் இந்த 5 வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

முகாமில் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு சா்க்கரை, ரத்த அழுத்தப் பரிசோதனைகள் நடைபெற்றன. ஆரோக்கிய இதயத்துக்கான உணவு அட்டவணையும் வழங்கப்பட்டது.

உங்கள் இதயத்தை எவ்வாறு பாதுகாப்பது என்ற புத்தகத்தைப் படித்து பயன்பெறவும் அறிவுறுத்தப்பட்டது. முகாமில், மருத்துவா்கள் சைஃப், அமல்தாஸ், அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்கள், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com