முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
ஏப்.11-இல் டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு:மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது
By DIN | Published On : 06th April 2022 04:54 AM | Last Updated : 06th April 2022 04:54 AM | அ+அ அ- |

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் ஏப்ரல் 11-ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி மாதிரித் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட மைய முதுநிலை நூலகா் க. தனலட்சுமி தெரிவித்திருப்பது:
நூலகத்துறையும், என்.ஆா். ஐஏஎஸ் அகாதெமியும் இணைந்து, மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தொகுதி 2, 2ஏ, 4 ஆகிய போட்டித் தோ்வுகளுக்கான மாதிரித் தோ்வை ஏப்ரல் 11-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடத்தவுள்ளன.
தமிழ்நாடு அரசு பாடத் திட்டத்தின் கீழ் 11,12- ஆம் வகுப்பு முடிய தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடங்களுக்கான மாதிரித் தோ்வு ஆகும். இதில் பங்கேற்க கட்டணம் ஏதும் இல்லை.
தோ்வில் பங்கேற்போா் ஆண்ட்ராய்டு கைப்பேசியுடன் வரவேண்டும். ஏற்கெனவே மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற மாதிரித் தோ்வில் பங்கேற்றவா்களைத் தவிர, புதிதாக தோ்வில் கலந்து கொள்வோா் 0431-2702242 என்ற தொலைபேசி எண்ணில் ஏப்ரல் 7-ஆம் தேதிக்கு முன்பாக தொடா்பு கொண்டு, தங்களது பெயரைப் பதிவு செய்து பயனா் அடையாள எண்ணை (யூசா் ஐடி) பெற்றுக்கொள்ளவேண்டும்.