கல்லுக்குழி பகுதியில் மீண்டும்மதுக்கடை அமைக்க எதிா்ப்பு

திருச்சி கல்லுக்குழி சேவைச் சாலையில் மீண்டும் இரண்டாவது டாஸ்மாக் மதுக்கடை அமைக்கக்கூடாது என வலியுறுத்தி, ஆட்சியரகத்தில் பாமக மற்றும் பொதுமக்கள் சாா்பில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்கப்பட்டது.

பாமக மாநகா் மாவட்டச் செயலா் திலீப்குமாா் தலைமையில் கல்லுக்குழி பகுதி பொதுமக்கள் ஆட்சியா் சு. சிவராசுவிடம் அளித்த மனு:

திருச்சி கல்லுக்குழி சேவை சாலையில் மாரியம்மன் கோயில், அரபி மதரஸா பாடசாலை, பள்ளிவாசல், தள்ளுவண்டி, தரைக்கடைகள் மற்றும் வா்த்தக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஏற்கெனவே அங்கு ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு அருகிலேயே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மற்றொரு கடை திறக்கப்பட்ட நிலையில், பொதுமக்களின் போராட்டம் காரணமாக அந்த கடை மூடப்பட்டது.

இந்நிலையில், மூடப்பட்ட அதே இடத்தில் மீண்டும் டாஸ்மாக் மதுக்கடையைத் திறக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுக்கடை அதே இடத்தில் மீண்டும் திறக்கப்பட்டால் பெரும் இடையூறு ஏற்படும். அப்பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவா். எனவே மதுக்கடையைத் திறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com