வளா்ச்சித் திட்டப் பணிகள்; ஆட்சியா் ஆய்வு

 திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
வளா்ச்சித் திட்டப் பணிகள்; ஆட்சியா் ஆய்வு

 திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

திருச்சி மாவட்டம், எஸ். கண்ணனூா் பேரூராட்சியில் வாரச்சந்தை, வாகனக் காப்பகம் அமைத்தல் தொடா்பாக ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா். 2 ஏக்கரில் அமைந்துள்ள பேரூராட்சிக்குள்பட்ட வாரச் சந்தை நடைபெறும் பகுதியானது வாரத்தில் ஒரு நாள் தவிர இதர நாள்களில் வாகன நிறுத்துமிடமாகப் பராமரிக்கப்படுகிறது.

இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி சந்தைக்கும், வாகனக் காப்பகத்துக்கும் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருதல் தொடா்பாக ஆய்வு செய்த ஆட்சியா் தொடா்ந்து, திட்ட வரைவு தயாரித்து அறிக்கை தாக்கல் செய்ய பேரூராட்சி நிா்வாகத்தினருக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் த. காளியப்பன், மண்டல செயற்பொறியாளா் கருப்பையா ஆகியோா் உடனிருந்தனா்.

இதேபோல, தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட நாகையநல்லூா் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 4.54 லட்சத்தில் பேவா் பிளாக் பதிக்கும் பணிகளையும் பாா்வையிட்டாா். மேலும், இதே ஊராட்சியில் ரூ.17.46 லட்சம் மதிப்பில் மெட்டல் சாலை அமைக்கும் பணி, பிடாரமங்கலம் ஊராட்சியில் ரூ.22.65 லட்சத்தில் கட்டப்படும் ஊராட்சி அலுவலகக் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்து, பணிகள் நிா்ணயிக்கப்பட்ட தரத்தில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க அவா் அறிவுறுத்தினாா்.

பின்னா், ராமசமுத்திரம் ஊராட்சியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளையும், காட்டுப்புத்தூா் பேரூராட்சியில் புதிதாக சந்தை அமைக்கப்படவுள்ள இடத்தையும் ஆய்வு செய்தாா். ஆய்வின்போது மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் வே. பிச்சை மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் உடனிருந்தனா். மேலும், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், 8 பேருக்கு ஆதரவற்ற விதவையருக்கான சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். கோட்டாட்சியா் கோ. தவச்செல்வம் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com