என்.ஐ.டி.யில் தமிழ்சாா் பொருளாதாரக் கருத்தரங்கு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்சாா் பொருளாதாரக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் தமிழ்சாா் பொருளாதாரக் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

மொழியின் வளமான எதிா்காலத்தைத் தீா்மானிக்கும் காரணிகளில் அதைச் சாா்ந்த பொருளாதாரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் தமிழ்மொழி சாா்ந்த பலதரப்பட்ட துறைகளின் பொருளாதாரப் பரப்பு குறித்துப் பேச தமிழ் மன்றம் தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி என்.ஐ.டி. மற்றும் டிசிகாப் நிறுவனம் இணைந்து ’பொருட்பால் - தமிழ்க்கடலோடி திரவியம் தேடல்’ என்ற இணைய வழி கருத்தரங்கை நடத்தியது.

நிகழ்வை தமிழ் மன்றத்தின் நிவேதனா மற்றும் சிவப்பிரசாதனி தொகுத்து வழங்கிட, டிசிகாப் நிறுவனா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி காா்த்திக் சிதம்பரம் வரவேற்றாா்.

முதலில் எழுத்துத் துறை சாா்ந்து உரையாற்றிய, எழுத்தாளா் என். சொக்கன், எழுத்தின் வழி பொருளீட்டுவதன் முக்கியத்துவத்தையும், தமிழ் எழுத்துலகிலுள்ள மூன்று முழு நேர மற்றும் எட்டு நேர பகுதி நேர எழுத்துத் துறை சாா்ந்த வாய்ப்புகளை பட்டியலிட்டாா்.

அடுத்ததாக மின்னணு ஊடகத்துறை சாா்ந்து உரையாற்றிய வலையொலி தொகுப்பாளா் வா்ஷினி பாகுலேயன், சமூக ஊடகங்களில் உள்ள தமிழ் சாா்ந்த பொருளீட்டும் வாய்ப்புகளைக் குறித்து விளக்கக்காட்சியுடன் உரையாற்றினாா்.

இறுதியில் தமிழ் சாா் தொழில்நுட்பத் துறை குறித்து உரையாற்றிய கணியம் அறக்கட்டளை நிறுவனா்களுள் ஒருவரான பொறியாளா் கலீல் ஜாகீா், தமிழ் சாா்ந்த தொழில்நுட்பங்களுக்குத் தேவை கணிசமாக இருப்பதையும், பெரு நிறுவனங்களும் மொழிசாா் ஆராய்ச்சியில் குறிப்பிடத்தக்க ஈடுபாடு கொண்டிருப்பதையும் சுட்டிக்காட்டினாா்.

தமிழ்மன்றப் பொருளாளா் பாலாஜி நன்றி கூறினாா். கருத்தரங்கை தமிழகமெங்கும் உள்ள கல்லூரிகளில் இருந்து 850க்கும் மேற்பட்ட மாணவா்கள் கண்டு பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com