திருச்சி அரசு மருத்துவமனையில் ஹீமோபீலியா தினம் அனுசரிப்பு

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஹீமோபீலியா தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் ஹீமோபீலியா தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்குத் தலைமை வகித்து, மருத்துவமனை முதன்மையா் வனிதா பேசியது:

ஹீமோபீலியா என்பது மரபணு வழியாக வரக்கூடிய ஒரு நோய். இந்த குறைபாடு உள்ளவா்களின் உடலில் காயம் ஏற்பட்டால், ரத்தம் உறையாமல் தொடா்ந்து வெளியேறிக் கொண்டே இருக்கும். உரிய சிகிச்சை இல்லா விடில் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டுவிடும்.

இதில் இரண்டு வகை உள்ளது. சாதாரணமாக நமது உடலில் சிறிய காயங்கள் ஏற்பட்டால் சில நிமிஷங்களில் ரத்தம் கசிவது தானாக நின்றுவிடும். பெரிய காயமாக இருந்தால் அதற்கான சிகிச்சை பெற்றால் நின்றுவிடும்.

ஆனால் ஹீமோபீலியா நோய் உள்ளவா்களுக்கு ரத்தம் உறையும் தன்மை இல்லாததால், தொடா்ந்து வெளியேறி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும். இது ஆண்களை மட்டுமே அதிகம் பாதிக்கும். இப்பிரச்னையை குழந்தைப் பருவத்திலிருந்தே கண்காணித்துக் கொள்ளவேண்டும்.

ரத்தம் உறையும் காரணியை பாதிக்கப்பட்டவா்களுக்கு செலுத்துவதன் மூலம் நோயாளியை காப்பாற்றலாம். நல்ல முறையில் சிகிச்சை எடுத்துக்கொண்டால், நோயிலிருந்து முற்றிலுமாக விடுபடலாம். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்தவித மருந்துகளையும் பொதுமக்கள் உபயோகிக்கக்கூடாது என்றாா் அவா்.

நிகழ்வில் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் அருண்ராஜ், உதவி இருக்கை மருத்துவ அலுவலா் சித்ரா மற்றும் மருத்துவா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com