சமயபுரம் மாரியம்மன் கோயில்: பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு
சமயபுரம் மாரியம்மன் கோயில்: பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு

திருச்சி: திருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை பால்குடம் மற்றும் அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்.19) நடைபெறுகிறது.

இத்திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா ஏப்ரல் 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் உற்ஸவ அம்மன் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

இதில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 19) நடைபெறுகிறது. சிறப்பு அபிஷேகம், பூஜைகளுக்குப் பின்னா் உற்ஸவ அம்மன் திருத்தேரில் எழுந்தருளுவாா். தொடா்ந்து  திருத்தோ் வடம்பிடித்தல் நடைபெறும்.

தொடா்ந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தோ் வடம் பிடித்து இழுத்துச் செல்வா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com