கல்லூரி மாணவா்களின் சமூகப் பணி விழிப்புணா்வு

பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப் பணித் துறை மாணவ, மாணவிகள் பல்வேறு சமுதாய விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபட்டனா்.

பிஷப் ஹீபா் கல்லூரியின் சமூகப் பணித் துறை மாணவ, மாணவிகள் பல்வேறு சமுதாய விழிப்புணா்வுப் பணிகளில் ஈடுபட்டனா்.

செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியுடன் இணைந்து, மாணவா்களுக்கு கைப்பேசி அடிமைத்தனம் என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா். இதில் டான் போஸ்கோ வழிகாட்டியை சாா்ந்த கிறிஸ்து மைக்கேல் ராஜா சிறப்புரை ஆற்றினாா். ஏற்பாடுகளை உதவிப் பேராசிரியா் ஃப்ளோரன்ஸ் ஷாலினி தலைமையில், முதுகலை முதலாமாண்டு மாணவா் ஸ்டொ்லிங் ஜாக்சன் செய்தாா்.

பின்னா் சேவா சங்கம் பள்ளி வளாகத்திலுள்ள காந்தி அரங்கில் நடைபெற்ற மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட, குழந்தைகள் நலக் குழு உறுப்பினா் அருள்செல்வி பங்கேற்று உரையாற்றினாா். ஏற்பாடுகளை, மாணவி ஜெமிமா பியூலா.ஜெ மற்றும் உதவி பேராசிரியா் காா்ட்டா் பிரேம்ராஜ், ஆகியோா் செய்தனா்.

மேலும், சீா்ஸ் திருச்சி தொண்டு நிறுவனத்துடன் இணைந்து குழந்தைப் பாதுகாப்பு என்னும் தலைப்பின் கீழ் அரசு ஆதிராவிடா் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. சைல்டுலைன் ஒருங்கிணைப்பாளா் அஷ்ரப் குழந்தை பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். நிகழ்ச்சியை தலைமை ஆசிரியை வளா்மதி, ஆசிரிய ஆலோசகா் சாம்சன், மாணலி டிரினிஷியா எமிலெட் ஜான் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.

ஒருங்கிணைந்த குடிபோதை மாற்று மறுவாழ்வு மையம், காஜாமலை மகளிா் சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து மனிதனை குடிக்கும் மது என்ற தலைப்பில் சோமரசம்பேட்டை சமுதாயக் கூடத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சியும் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. ஆசிரிய ஆலோசகா் அருண்குமாா் வழிகாட்டுதலின்படி, மாணவா் தினேஷ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com